பட்டுக்கோட்டையில் செல்போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம்!வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் விலை குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு விலை ஏற்றம் கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. வெங்காயத்தின் விலை இப்படி உயரும் நிலையில், வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதில் பாதி கூட கிடைப்பதில்லை.


உணவில் அத்தியாவசிய தேவையாக வெங்காயம் உள்ளது. விலை ஏறத் தொடங்கியதால் உணவு விடுதிகளில் வெங்காய சட்னி, தயிர் வெங்காயம், ஆம்லெட்டுக்கு வெங்காயம் இல்லை. வெங்காயத்திற்கு பதில் முட்டைக்கோஸ் என்று மாற்றிக் கொண்டனர்.

இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஒரு செல்போன் கடையில் தனது வாடிக்கையாளர்களுக்கு செல்போன் வாங்கினால் ஹெட்போன், மெமரிக் கார்டு இலவசமாக கொடுத்து வந்த நிலையில், தனது வாடிக்கையாளர்கள் வெங்காயம் வாங்க கடை கடையாக அலையக்கூடாது என்பதற்காகவும், விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும், ஒரு செல்போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று செல்போன் கடையின் உரிமையாளர் பதாகை வைத்தார். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments