புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனுராதா தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை..!உலக அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் சாதித்து வருகிறார்கள் தமிழர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு தடகளம் சாந்தி, சில மாதங்களுக்கு முன்பு கோமதி மாரிமுத்து.
ஜூலையில் காமன்வெல்த்தில் 121 கிலோ பளுதூக்கி தங்கத்தோடு புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டடி என்ற சொந்த ஊருக்கு வந்தார் தங்க மங்கை அனுராதா. பளு தூக்கும் போட்டியில் தமிழ்நாட்டின் முதல் தங்கம் வென்ற பெண் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார்.

எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது அதற்கான பயிற்சியை தொடங்க இருக்கிறேன். எனது வெற்றிக்கு எனது அண்ணன் மாரிமுத்து மற்றும் குடும்பத்தினர், துணையாக இருக்கும் காவல் உயர் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் என்று அப்போது சொன்னார். அனுராதா தஞ்சை தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார். 

இந்த நிலையில் தான் கடந்த 1- ஆம் தேதியில் இருந்து நேபாளத்தில் நடக்கும் 13- வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவில் இருந்து அனைத்து பிரிவுகளிலும் வீரர்கள், வீராங்கனைகள் சென்று கலந்து கொண்டனர். 

அதில் பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களையும் வென்றுள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று (07.12.2019) நடந்த பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அனுராதா தங்கம் வென்றார். காமன் வெல்த்தை தொடர்ந்து தெற்காசிய போட்டியிலும் அடுத்தடுத்து தங்கம் வென்றுள்ள உதவி ஆய்வாளர் அனுராதாவை காவல் உயர் அதிகாரிகளும், கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.

கைப்பந்துப் போட்டியில் புதுக்கோட்டை கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெரோம் வினித் கேப்டனாக தலைமை ஏற்றி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றார். அடுத்தும் புதுக்கோட்டை நெம்மேலிப்பட்டி அனுராதா தங்கம் வென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments