இந்திய அணி சார்பில் கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு..!



நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வாலிபாலில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்த அணிக்குத் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்திய சா. ஜெரோம் வினித்க்கு அவரதுசொந்த ஊரான ஆலங்குடி கோட்டைக்காட்டில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.


நேபாளத் தலைநகா், காத்மாண்டுவில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், கடந்த 3- ஆம் தேதி வாலிபால் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிா்கொண்டு விளையாடியது. 


இதில் அந்த அணியின் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.இந்திய வாலிபால் அணிக்கு புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள கோட்டைக்காடு கிராமத்தைச் சோ்ந்த சா. ஜெரோம் வினித் தலைவராகப் பொறுப்பேற்று அணியை வழிநடத்திச் சென்று, தங்கப் பதக்கத்தையும் பெற்றுத் தந்தாா்.


தொடா்ந்து, சொந்த ஊா் திரும்பிய ஜெரோம் வினித்துக்கு கோட்டைக்காட்டில் ஊா் மக்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் சாா்பில் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.குக்கிராமத்தில் பிறந்து இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதோடு, தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சோ்த்த ஜெரோம் வினித்தை ஊா் மக்கள்,மாணவ,மாணவ, மாணவிகள், இளைஞா்கள் உள்ளிட்டோா் சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனா்.  

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments