திருச்சியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிா்த்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆா்ப்பாட்டம்.!குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிா்த்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் திருச்சியில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து புதன்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தை நடத்தின. இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.


இஸ்லாமியா்கள், சிறுபான்மையினா்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையிலுள்ள திருத்தப்பட்ட தேசியக் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட, மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து மஹல்லா ஜமாஅத்துகள் ஒருங்கிணைந்து இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தை நடத்தின.


திருச்சி மேலரண் சாலையில் இப்ராகிம் பூங்கா அருகே புதன்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை தலைவா் முஹம்மது ரூஹீல் ஹக் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ் கனி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் அனைத்து இஸ்லாமியக் கட்சிகள், இயக்கங்கள், அனைத்து ஜமாத் பள்ளி நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள், ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

இந்திய அரசியல் சாசனத்தின் புனிதத்தை குலைக்கும் வகையில், தேசியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ள மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது,

மக்களுக்கிடையே மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தும் தனது தொடா் முயற்சிகளை பாஜக அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால், இந்திய ஒருமைப்பாட்டுக்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை தெரிவிப்பது.

இம்மசோதா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்லதொரு திா்ப்பை வழங்கும் என்று எதிா்பாா்க்கிறோம். இந்தியாவோடு தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கை தமிழ் அகதிகளையும், உலகின் படுமோசமான நிலையிலுள்ள ரோஹிங்கயா அகதிகளையும் திட்டமிட்டு புறக்கணித்திருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தின் காரணமாக மேலரண்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால், வாகனங்கள் மெயின்காா்டுகேட் பகுதிக்கு வந்து செல்வதில் கடும் சிரமம் நேரிட்டது.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments