கோபாலப்பட்டிணத்தில் இடைவிடாத மிதமான மழை.!!!
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 07.12.2019 சனிக்கிழமை அன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
நண்பகல் நேரத்தில் தூரல் மழை பெய்தது, மதியம் 3 மணியளவில் இருந்து 6 மணி வரை சுமார் 3 மணி நேரம் இடைவிடாத மிதமான மழை பெய்தது. இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. 


கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில்,


தற்போது கடந்த சில தினங்களாக பல ஆண்டுகளுக்கு பிறகு நல்ல கன மழை பெய்தது, மக்கள் பயன்பாட்டுக்குரிய குளங்கள் அனைத்தும் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பியது.

கோபாலப்பட்டிணத்தில் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த ஆண்டு மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பல இடங்களில் சாலைகளில், விடுகளில் உள்ளே குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கின்றன. இதனால், வீட்டில் இருப்போர், நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

மேலும் கோபாலப்பட்டிணத்தில் சரியான சாலை வசதி மற்றும் வடிகால் வாய்க்கால் இல்லாத காரணத்தால் பல முக்கிய சாலைகளிலும், பல தெருக்களிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியே செல்ல முடியாமல்  சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

எனவே மழை நீர் தேங்காத அளவுக்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments