கோட்டைப்பட்டிணத்தில் CAA மற்றும் NRC சட்டநகல்களை கடலில் வீச மஜகவினர் முயற்சி.!மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் கருப்பு சட்டங்களான CAA மற்றும் NRC சட்ட நகலை கடலில் வீசும் போராட்டம் கோட்டைப்பட்டிணத்தில் நேற்று 27.12.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இதில் மாவட்ட செயலாளர் முபாரக் அலி தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் சையது அபுதாஹிர், ஒன்றிய செயலாளர் செல்லஅத்தா ஆகியோர் முன்னிலையில், மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் சலாம் எதிப்பு கோசங்களை முன்மொழிந்தார்.


அரசியல் சாசனத்திற்கு எதிரான சட்டம், ஜனநாயகத்தை அழிக்கும் சட்டம். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சட்டம் வேண்டும் என்ற கண்டன கோசங்களை எழுப்பியவாரு கடற்கரையை நோக்கி சென்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இப்போராட்டத்தில்  கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது,  சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய துணைச் செயலாளர் நாகூர் கனி,  ஒன்றிய பொருளாளர் முகம்மது குஞ்சாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் கான், நகர செயலாளர் ஜகுபர், நகர பொருளாளர் அப்துல் கரீம், சாதிக் துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ். இளைஞர் அணிச் செயலாளர் கலந்தர் மைதின், மாணவர் இந்தியா நிர்வாகிகள் சேக் பரீத், உமர் ஹத்தாப் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK_IT_WING
புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
27.12.19

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments