கண்களை கட்டிக்கொண்டு 35 கி.மீ சைக்கிள் பயணம் - 9 வயது சிறுவன் சாதனை..!தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார்ப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருபவர் ஆசிவ் வயது ( 9 ) ஆசிவ் கண்ணைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு , அதில் பயிற்சியும் மேற்கொண்டு வந்துள்ளார் . அதற்கு அவரது பெற்றோரும் ஊக்கமளித்து வந்துள்ளனர். ஆசிவ் வீட்டிலேயே கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுவாராம்.


இந்நிலையில் , இன்று பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து பேராவூரணி சாலையில் கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டிக்கொண்டே சுமார் 35 கி . மீ வரை சென்றுள்ளார் . இந்த சாதனைக்கு 20 கி . மீ தூரம் வரையே இலக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிவ் 35 கி . மீ வரை பயணித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இவரது சாதனைக்கு அங்கீகாரமாக , இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆசிவின் சாதனையைப் பதிவு செய்துள்ளது . ஆசிவுக்கு அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments