மறந்து விடாதீர்.. மறந்தும் இருந்துவிடாதீர்.. கோபாலப்பட்டிணத்தில் நாளை ஜன.19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்



தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும், ஜனவரி 19ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.


அதே போல் நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதுசமயம் பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில்  அழைத்து சென்று பயன் பெறுமாறு GPM MEDIA சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

கோபாலப்பட்டிணத்தில் இரு இடங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நாளை 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

கீழ்கண்ட இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது.

1. பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் (பால்வாடியில்) 

2. காட்டுகுளம் பள்ளிவாசல் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் (பால்வாடியில்) 

 தகவல்:
திருமதி லூர்து மேரி அவர்கள், 
கிராம சுகாதார செவிலியர், 
நாட்டாணிபுரசக்குடி.

போலியோ சொட்டு மருந்து முகாம் பற்றி:

✴ இளம்பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்படுவது போலியோ சொட்டு மருந்து. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாகும்.

✴ 1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில், போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை. ஆனால், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் தமிழகத்தில் சுத்தமாக வரக்கூடாது என்பதற்காகக் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது..

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments