2-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் GPM மீடியா வாட்ஸ்ஆப் குழுமம்..!



அன்பார்ந்த GPM மீடியா வாசகர்களே!

2-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் GPM மீடியா வாட்ஸ்ஆப் குழுமம்.


GPM மீடியா வரலாறு தெரிந்து கொள்ளுங்கள்...

GPM மீடியா இணையதளம்:

GPM மீடியா இணையதளம் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை www.gopalappattinam.blogspot.com என்ற இணைய முகவரியில் இயங்கியது. பிறகு www.gopalappattinam.com என்ற இணைய முகவரியில் தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

GPM மீடியாவின் சமூக வலைதளங்கள்:

GPM மீடியாவின் சமூக வலைதளங்கள், (Facebook, Whatsapp, Instgram, Helo, Twitter, Youtube ) ஆகிய ஆறு சமூக வலைதள பக்கங்களை கொண்டது. 

முகநூல் (Facebook):

கோபாலப்பட்டிணம் மீடியா என்ற பெயரில் முகநூல் பக்கம் இயங்கி வருகிறது. இது கடந்த 2011-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்டது. இதில் 2500-க்கும் மேற்பட்ட வாசகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். 

வாட்ஸ்ஆப் (WhatsApp):

GPM MEDIA என்ற பெயரில் இயங்கி வருகிறது.  இது 2019 ஜனவரி 17 அன்று உருவாக்கப்பட்டது. இதில் மொத்தம் நான்கு குழுமங்களில் இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட உள்ளூர் வாசகர்கள் பயணித்து வருகின்றனர். 

GPM MEDIA 4 வாட்ஸ்அப் குழுமங்களாக உருவாகி செயல்பட்டு வருகிறது. (GPM MEDIA - 1, GPM MEDIA - 2, GPM MEDIA - 3, GPM MEDIA - 4) .

GPM MEDIA குழுமத்தின் நோக்கம்:

✴ GPM MEDIA இணைய தளமானது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில் (17 ஜனவரி) சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

✴உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை  (GPM Media - www.gopalappattinam.com) நாம் துவங்கி இருக்கின்றோம்.

✴ இங்கு நமது ஊர் மற்றும் சுற்றுவட்டார பகுதி சம்பந்தப்பட்ட அன்றாட செய்திகளும், அரசியல், மாவட்ட, வெளிநாடு, விளையாட்டு மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள், வஃபாத் செய்திகள் அவ்வப்போது பதியப்படும். 

✴ நிகழ்சிகள் பற்றி எங்களுக்கு புகைப்படத்துடன் செய்தி அனுப்பினால் இங்கு பிரசுரிக்கப்படும்.

✴ நமது ஊரில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்வதற்கு முயன்று வருகிறோம். எனவே தன்னார்வத்துடன் செய்திகளை அனுப்ப விரும்புவோர் நமது சிறப்புச் செய்தியாளர்களாக பணியாற்றலாம்.

✴ இந்த தளத்தில் நமது பகுதிகளில் நடக்கும் அனைத்து முக்கிய விவரங்களையும் வெளியிட முயன்று வருகிறோம். எனவே செய்திகள், ஆலோசனைகள், கடிதங்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வாழ்த்துக்கள்  மற்றும் அனுதாபங்கள் என அனைத்தையும் எங்களுக்கு அனுப்பிவையுங்கள். ஏனெனில் நம்மில் சிலருக்கு சாதாரணமாகத் தோன்றும் பல விஷயங்கள் பலருக்கு முக்கியமான தகவல்களாக அமையலாம்.

✴ இப்பொழுது உள்ள சூழலில் நாம் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறோம். ஆனால் அது சில மாதங்களிலே அழியக்கூடியதாக உள்ளது. எனவே அந்த பதிவுகளை பாதுகாக்கும் வண்ணம் அனைத்து பதிவுகளும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

✴ நமது ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. எனவே தங்களின் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம்.

✴ GPM MEDIA என்றுமே நடுநிலையானது. நாங்கள் எந்த கட்சிக்கோ, எந்த இயக்கத்திற்கோ ஆதரவானவர்களோ அல்லது எதிரானவர்களோ அல்ல. எந்த ஒரு செய்தியை பகிர்தாலும் நன்கு ஆராய்ந்து, அறிந்த பிறகுதான் அந்த செய்தியை வெளியிடுகிறோம். உள்ளூர் செய்திகள், சுற்றுவட்டார செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், வெளிநாட்டு செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள் என அனைத்து செய்திகளும் நமது GPM மீடியவில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.

✴ உள்ளூரில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை வெளி நாட்டில் &  வெளியூர் வாழக்கூடிய மண்ணின் மைந்தர்கள் அறிந்து கொள்ளும் விதமாக செய்திகளை வெளியிட்டு கொண்டு இருக்கிறோம்.

✴ நாங்கள் வெளியிடும் செய்திகளில் ஏதேனும் மாற்றுகருத்துக்கள் இருந்தால் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்கலாம். தங்களின் கருத்துகள் முழுமையாக வரவேற்கப்படுகின்றன.

✴ ஆனால் அதே சமயத்தில் யார் மனமும் புண்படாமல் உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 

✴ எங்களுக்கு கடந்த ஒரு வருட காலமாக  ஆதரவு கொடுத்து வந்த வாசகர்கள் அனைவருக்கும் எங்களது GPM மீடியா - ADMIN TEAM சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் உங்களுடைய  நல்ஆதரவை தந்து எங்களுடைய சேவை மக்களுக்கு பயனுள்ளதாக தொடர மனமார எங்களுக்காக துஆ செய்யுங்கள். 

GPM மீடியாவின் செயல்பாடுகளில் விமர்சனங்கள் ஏதும் இருப்பின் எங்களுடைய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு எழுதியோ அல்லது குரல் பதிவாகவோ எங்களுக்கு தெரிவிக்கலாம்.

உங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது..

உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.

✴ Facebook Like:


✴ Twitter Like: 


✴ Instagram Like:


✴ YouTube Subscribe: 


✴ Website Watch:


தொடர்பு கொள்ள மற்றும் உங்கள் செய்திகளை வெளியிட :

 https://wa.me/918270282723 (Whatsapp only)

 gpmmedia2011@gmail.com


அன்புடன்..
GPM MEDIA TEAM,
GOPALAPATTINAM, 
MIMISAL - 614621.
PUDUKKOTTAI DISTRICT
TAMILNADU,
INDIA.

#GpmMedia #2nd_Anniversary #Gopalappattinam #Mimisal #Pudukkottai #Tamilnadu #India

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments