கறம்பக்குடியில் டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்...!பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல், தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற சம்பவங்கள் சாதாரணமாக தொடங்கிவிட்டது. அதனால் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து போராட்டக் களமாக மாறி வருகிறது.
டெல்லியில் பல்கலைக் கழக மாணவர்களை முகமூடிக்கும்பல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய சம்பவம் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை தூண்டியுள்ளது.

இந்த சம்பவத்தை எதிர்கட்சிகள் கண்டித்து வரும் நிலையில் எதிர் கட்சிகள் தான் முடிமூடி அணிந்து கொண்டு தாக்கி இருக்கிறார்கள் என்று சொல்லி சமாளிக்கப்பார்க்கிறார்கள். ஆனால் மாணவர்கள் மீது கொடூரமாக தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மருதன்கோன்விடுதி அரசு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்த மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி மாணவர்கள் மது தாக்குதல், குடியிரிமை சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடந்த மாணவர்கள் போராட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments