புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்..! மாவட்ட ஆட்சியர் தகவல்..!



குடியரசு தினத்தன்று (26ம்தேதி) புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு வருகிற 26ம் தேதி மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்;மேலாண்மை இயக்கம் குடிமராமரத்து, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள், மக்கள் திட்டமிடல் இயக்கம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், முதலமைச்சரின் சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் 2020-21 பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் சக்தி அபியான், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்-2 உள்ளிட்ட பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன. 

மேலும் இக்கூட்டத்தில் நியாய விலை கடையின் செயல்பாட்டில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும் வகையில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளின் பட்டியல் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியின் கிராம சபை முன்பாக வைக்கப்பட உள்ளன. பொது விநியோக திட்ட செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கான குடும்ப அட்டைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்து கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்பட உள்ளன. கூட்டங்களில் தெரிவிக்கப்படும் புகார்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட, வட்ட குறைதீர்க்கும் அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 7 தினங்களுக்குள் தீர்வு காணப்படும்.

மேலும், நியாய விலை கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கைக்கு உட்படுத்தி குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிக்கும் குறைபாடுகளை பதிவு செய்து குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். எனவே, கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது விநியோக திட்ட செயல்பாடுகள் தொடர்பான தங்கள் கருத்துக்களையும், குறைகளையும் தெரிவிக்கலாம்.

மேலும் அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments