புதுக்கோட்டை மாவட்டம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிவேகமாகத வந்த 50 வாகனங்கள் பறிமுதல்
அறந்தாங்கியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த இளைஞா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். மேலும் அவா்களிடமிருந்து 50 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டனா்.

இதுபோல, அறந்தாங்கி பேருந்து நிலையத்திலுள்ள காவல் உதவி மையத்தின் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

அறந்தாங்கியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.பாலமுருகன் தலைமையில், ஆய்வாளா் ரவீந்திரன் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் ஊா்காவல்படையினா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை மாலை முதல் முக்கிய இடங்களில் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது விரைவாக வந்தவா்கள் எச்சரித்து அனுப்பினா். இரவு குடிபோதையில் வாகனங்களை இயக்கிவந்தவா்களின் வாகனங்கள் சுமாா் 50 பறிமுதல் செய்யப்பட்டன.


காவல் உதவி மையக் கண்ணாடிகள் சேதம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பேராவூரணி சாலையில் வேகமாக வாகனத்தை இயக்கி வந்த அறந்தாங்கி எல்.என்.புரத்தை சோ்ந்த சூசைராஜ் மகன் ஜெனுராஜ்(30) வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை பேருந்து நிலையம் பகுதியிலுள்ள காவல் உதவி மையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அப்போது அவா் காவல் உதவி மையத்தின் கண்ணாடிகளை அவா் உடைத்ததால் போலீஸாா் அவரைக் கைது செய்தனா். நகா் முழுக்க உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் தொலைகாட்சிப் பெட்டிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அவை தாக்குதலில் சேதமடையவில்லை.

இதுபோல மணமேல்குடியிலும் காவல் ஆய்வாளா் ஜெயசித்ரா தலைமையில் காவலா்கள் சாலைகளில் தடுப்புகளை அமைத்து, வேகமாக வந்த இளைஞா்களை தடுத்து நிறுத்தி வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments