அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு... பள்ளிகள் ஜன. 6 அன்று திறக்கப்படும் என அறிவிப்பு.!



உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  ஜனவரி 2-ம் தேதியிலிருந்து தொடர்ந்து நடைபெற்றுவருவதால் அரையாண்டு விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போதும் புத்தாண்டுக்கு மறுநாளான ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும். ஆனால், வாக்கு எண்ணிக்கை காரணமாக, பள்ளிகள் 4-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், வாக்குச்சீட்டு முறை என்பதால் வாக்கு எண்ணிக்கை நாளை வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. பள்ளிகளில் வாக்கு எண்ணும் மையம் அமைத்திருப்பதால், திட்டமிட்டபடி பள்ளிகள் 4-ம் தேதி திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

மேலும், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட வேண்டி உள்ளதால் 4-ம் தேதி பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும் 4 மற்றும் 5-ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் 6-ம் தேதி திங்கள் அன்று பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜன.,06ம் தேதி திங்கள்கிழமை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் திறக்கப்படும். அதே நாளிலேயே, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments