தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல இரத்ததான சேவையைப் பாராட்டி சான்றிதழ்



சவுதி அரேபியா சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் கடந்த 12 வருடங்களாக இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானங்களை செய்து ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளித்து வருகின்றது.
அதைத் தொடர்ந்து நடப்பாண்டிலும் (2019) பல்வேறு இரத்ததான முகாம்கள் நடைபெற்றது. இதில் 1141 குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறையின் அடிப்படையில் சுமார் 944 யூனிட்கள் (424.8 லிட்டர்கள்) இரத்தம் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த மனித நேய சேவையைப் பாராட்டி கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனை இரத்த வங்கியின் பொறுப்பாளர் டாக்டர். இம்ரான் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ இ.பாரூக் அவர்களிடம் வழங்கினார்கள். 

இரத்த வங்கியின் பொறுப்பாளர் டாக்டர். இம்ரான் அவர்கள் கூறுகையில்:-

 “மறுமை நன்மையை மட்டும் நாடி செய்யப்படும் இது போன்ற மனித நேயப் பணி பாராட்டுக்குரியது” என்றும், இந்த மனித நேயப் பணியினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகின்றது என தனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்தார்கள்.

இதனைப் போன்று சவுதி அரேபியா சுகாதாரத் துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் இதற்கு முன்பும் பெற்றுள்ளதுடன், நடப்பாண்டில் சிறந்த இரத்ததானத்திற்காக பெறும் இரண்டாவது பாராட்டுச் சான்றிதழ் இதுவாகும். கடந்த மாதம் கிங் சவுத் மெடிக்கல் சிட்டியில் (சுமைஸி) மருத்துவமனையின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments