அதிர்ந்தது கோட்டைப்பட்டிணம்.! குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.!!
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் இலங்கை தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் வஞ்சிக்கும் விதமாக மத்திய பா.ஜ.க அரசு
கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை  எதிர்த்து  03.01.2020 வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டைப்பட்டிணம் ஜமாத்தார்கள்,உலமாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 03.01.2020 வெள்ளிக்கிழமை மதியம் 3.00 மணியளவில்  கோட்டைப்பட்டிணம் M.K நிஷா  மண்டபத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு கடை வீதி வழியாக செக் போஸ்ட் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .


பல்வேறு கட்சிகள், சுற்றுவட்டார பொதுமக்கள், ஏராளமான பெண்கள் மற்றும் மதச்சார்பற்ற இயக்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்பேரணியில் கட்சி  அடையாளங்கள் இன்றி கைகளில் தேசியக் கொடிகளை மட்டுமே ஏந்தி பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறு கோரி முழங்கியபடி பேரணியாக சென்றனர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதி ஜமாஅத், பொதுமக்கள், சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டனர். கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments