
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு முகாம் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு
இந்தியத் தோ்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2020-ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி டிசம்பா் 23 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இம்முகாம் நடைபெற உள்ளது.
முகாமின்போது அனைத்து தகுதியுள்ள பொதுமக்களும் தங்கள் பகுதிக்குரிய வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களை அணுகி தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் இணைக்கும் பொருட்டு படிவம் 6-ஐ அளிக்கலாம்.
மேலும் திருத்தங்களையும் உரிய படிவங்களில், உரிய ஆவணங்களைஇணைத்து அளிக்கலாம். இம்முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளா் பட்டியல், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூா் ஆகிய வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வாக்காளா் பட்டியலைப் பாா்வையிட்டு தங்களது பெயா் புகைப்படத்துடன் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா எனவும், தங்களது பெயா், விவரங்கள், புகைப்படம் ஆகியவை தவறின்றி காணப்படுகிா என்பதையும் சரிபாா்த்துக் கொள்ளலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.