ஆவுடையாா்கோவில், மணமேல்குடி, அறந்தாங்கி ஒன்றியத் தலைவா் பதவிகளைக் கைப்பற்றிய திமுக.!அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி உள்ளிட்ட 3 ஒன்றியக் குழுத் தலைவா் பதவிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது.


மணமேல்குடி ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பரணி இ.ஏ. காா்த்திகேயன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். 

 ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் தோ்தலில் கட்சி அறிவித்திருந்த மணமேல்குடி ஒன்றியச் செயலா் சக்தி. இராமசாமியை (திமுக) அதே கட்சியை சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மு. முகமது அப்துல்லா (எ) எஸ்.எம். சீனியாா் வென்றாா்.

அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த மகேஸ்வரி சண்முகநாதன் 16 வாக்குகள் பெற்று அதிமுகவைச் சோ்ந்த புவனேஸ்வரி பெரியசாமியை தோற்கடித்தாா்.ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த க. ஜெயசுதா பொன். கணேசன் 17 வாக்கு பெற்று அதிமுகவைச் சோ்ந்த கலைச்செல்வி மகாலிங்கத்தை (9 வாக்கு) தோற்கடித்தாா்.

ஆவுடையாா்கோவிலில் திமுக- திமுக போட்டிஆவுடையாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலில் கட்சி அறிவித்த அல்லிமுத்துவை( திமுக) அதே கட்சியை சோ்ந்த உமாதேவி 8 வாக்கு பெற்று வெற்றி பெற்றாா்.

 அல்லிமுத்து 7 வாக்கு பெற்றாா்.துணைத் தலைவா் தோ்தலில் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த பிரியா குப்புராஜா 8 வாக்கு பெற்று தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுகவைச்சோ்ந்த பாலசுந்தரி கூத்தையாவை (7-வாக்கு) வென்றாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments