கோபாலப்பட்டிணத்தில் TNTJ சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு பயான்மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு பயான் 14.01.2020 செவ்வாய்க்கிழமை அன்று இரு வேறு இடங்களில் சிறப்பு பயான் நடைபெற்றது. 

பெண்கள் பயான் :
பெண்களுக்கான சிறப்பு பயான் இமாம் தீன் இல்லத்தில் (கடற்கரை தெரு) அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. 


இந்த சிறப்பு பயானில் சகோதரர் அப்துல் ரசாக் அவர்கள் இஸ்லாம் ஓர் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இதில் பெண்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர். 

ஆண்கள் பயான்:

ஆண்களுக்கான சிறப்பு பயான் அரஃபா தெரு பிரதான சாலையில் உள்ள தவ்ஹீத் மர்கஸில் மகரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. 

இந்த சிறப்பு பயானில்  சகோ அபுபக்கர் சித்தீக் MISC அவர்கள்  குடியுரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இதில் இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

என்றும் மர்க்கபணியில் 

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்

தகவல்: அப்துல் ரசாக்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments