புதுக்கோட்டை மாவட்டம் எப்போது உருவாக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்ப்போம்



தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம். ஜனவரி 14, 1974ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் திருச்சியும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், வட கிழக்கில் தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளன.

ஒரு வறட்சியான மாவட்டமாகவே புதுக்கோட்டை உள்ளது. மாவட்டத்தின் நீர் வரத்து பெரும்பாலும் பருவ மழையை நம்பியே உள்ளது.

இம்மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன. குளத்தூர், இலுப்பூர், ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் மற்றும் மணமேல்குடி ஆகிய வட்டங்களும் உள்ளன.

இவற்றுள் 756 பெரிய வருவாய் கிராமங்களும் அடங்கும்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments