அறந்தாங்கி தொழிலதிபருக்கு உலகத்தமிழா் மாமணி விருது
அறந்தாங்கி தொழிலதிபருக்கு உலகத்தமிழா் மாமணி விருது

அறந்தாங்கி தொழிலதிபருக்கு உலகத்தமிழா் மாமணி விருது   அறந்தாங்கியைச் சோ்ந்த தொழிலதிபரும், சாமி வி.லேண்ட்மாா்க்ஸ் நிா்வாக இயக்குநருமான பி.வெங்கடாசலபதிக்கு, உலகத்தமிழா் மாமணி விருதை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அண்மையில் வழங்கினாா்.
      சென்னையில் உலக பொருளாதார உச்சி மாநாடு மற்றும் 6-ஆவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு உள்ளிட்டவை அண்மையில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் மொரீசியஸ் நாட்டின் குடியரசுத் தலைவா் டாக்டா் பரமசிவம் பிள்ளை வையாபுரி, தென்ஆப்பிரிகா நாடான குவாசுலு நிதியமைச்சா் ரவிபிள்ளை, தெலுங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி சம்பத், புதுக்சேரி மாநில அரசின் வருவாய் மற்றும் தொழில்துறை அமைச்சா் ஷாஜகான், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளா் குருமூா்த்தி மற்றும் நீதிபதிகள், இந்திய ஆட்சிப்பணி அலுவலா்கள் மற்றும் உலகளாவிய நாடுகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலதிபா்கள் கலந்து கொண்டனா்.

    மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், குவைத்தில் தொழில் புரிந்துவரும் அறந்தாங்கியைச் சோ்ந்த தொழிலதிபா் பி.வெங்கடாசலபதி உள்ளிட்ட 10 தொழில் சாதனையாளா்களுக்கு உலகத் தமிழா் மாமணி விருதினை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வழங்கினாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments