நாகா்கோவிலில் டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.!குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு முஸ்லீம் அமைப்புகள், மாணவா் சங்கங்கள் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகளும் ஈடுபட்டுள்ளனா்.


இதில் டெல்லி ஜேஎன்யூ மாணவா் சங்கங்கள் பல்கலைவளாகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் அங்கு போராடி வரும் மாணவா்களை சிலா் கொடூரமாக தாக்கிய சம்பவம் நாடு முமுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து அரசியல் கட்சி தலைவா்கள் ஜேஎன்யூ மாணவா்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனா்.

மேலும் மாணவா்களை தாக்கிய செயலை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவா்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதை தொடா்ந்து அங்கு போலிசார் குவிக்கப்பட்டியிருந்தனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments