புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சிறப்பு சேர்த்துள்ள ஊராட்சி மன்ற தலைவர் …!



புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் அமைந்துள்ள குலமங்கலம் ஊராட்சியின் கிராம சபா கூட்டம் ஜனவரி 26, 2020 ஊராட்சிமன்ற தலைவர் சத்தியா நீலமேகம் அவ ர்கள் தலைமையிலும் ஒன்றிய கவுன்சிலர் திரு.பழனியப்பன் அவர்கள் முன்னிலையிலும் கிராம சபா கூட்டம் மலையலிங்கபுரம் கிராமத்தில் நடத்தப்பட்டது.


ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்தவாறு தனது மற்றும் தனது குடும்பத்தாரின் சொத்து பட்டியலை கிராம சபா கூட்டத்தில் பொது மக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்திய அளவில் தான் வெற்றி பெற்று நடக்கும் முதல் கிராம சபா கூட்டத்தில் ஊழல், லஞ்சம் அற்ற வெளிப்படையான நிர்வாகத்தை அமைக்க தனது சொத்து பட்டியலை வெளியிட்ட முதல் ஊராட்சி மன்ற தலைவர் என்ற பெருமையை நமது ஊராட்சிக்கு தேடி தந்துள்ளார்.

மேலும் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் முதல் கிராம சபா கூட்டத்தில் தனது மற்றும் குடும்பத்தாரின் சொத்து பட்டியலை வெளியிடுவதாவும் உறுதி அளித்துள்ளார் .


மத்திய, மாநில அரசுகளின் ஆளும் அரசியல்வாதிகளின் மீது ஊழல் மற்றும் மோசடி குற்ற சாட்டுக்களை விசாரிக்கும் லோக்பால் மற்றும் லோகாயுத்தா அமைப்புக்களை போன்று ஊராட்சி அளவில் ஊராட்சி ஊழல் ஒழிப்பு குழு என்ற நிலைக்குழுவை உருவாக்கி ஊராட்சி அளவில் நடக்கும் ஊழல் குற்ற சாற்றுக்களை விசாரிக்கும் அமைப்பை மூன்று மாத காலத்திற்குள் உருவாக்கி செயல்படுத்தவும் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .. இந்த முயற்சியும் இந்திய அளவில் செயல்படுத்தும் முதல் ஊராட்சி என்ற பெருமையை நமது ஊராட்சி அடைந்துள்ளது.

இயற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் :-

பொதுத் தீர்மானங்கள்:-

  1. மதுக்கடைக்கு எதிராக தீர்மானம் .
  2. தைல மர காடுகளை அகற்ற தீர்மானம் ..
  3. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாய அனைத்து வேலைக்கும் பயன்படுத்தும் வகையில் தீர்மானம் .
  4. அனைத்து குக்கிராமங்களிலும் CCTV கண்காணிப்பு வேண்டி தீர்மானம் ..
  5. ஊராட்சியில் உள்ள அனைத்து பொதுக்கிணறுகளையும் மீடடெடுத்து மழை நீரை சேமிக்க வேண்டியும், நிலத்தடி நீரை உயர்த்த வேண்டிய தீர்மானம் ..
  6. ஊராட்சியின் பொது ஆழ்துளை கிணறுகள் அனைத்தின் அருகில் மழை நீர் சேகரிப்பு தொட்டியை அமைக்க கோரிய தீர்மானம் .
  7. ஊராட்சியின் அனைத்து குளங்களையும் மீட்டு பக்கவாட்டு சுவர் எழுப்பி , படி கட்டி பராமரிக்க கோரிய தீர்மானம் ..
  8. கால்நடை மருத்துவமனை வேண்டி தீர்மானம் .
  9. மக்கள் குடியிருப்பு மற்றும் பொது இடங்களில் உள்ள கருவேல மரங்கள் அகற்ற கோரிய தீர்மானம் ,

இப்படிக்கு – சத்தியா நீலமேகம்,
குலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments