இறால் குஞ்சு பொரிப்பகதிற்கு தடை-கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.!




விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகாவில் உள்ள மரக்காணம் ஒன்றியத்தில் கீழ்பேட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் மீனவ குப்பத்தில் இறால் குஞ்சு பொரிப்பகத்திற்கு தடைசெய்ய கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் முடிவுசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதனால் குடிநீர் உப்புநீராக  வருவதாகவும் அதிலிருந்து வரும் கழிவால் புற்றுநோய் உட்பட ஏற்படுவதால் இதனால் எண்ணற்ற நோய் வகைகள் பரவுகிறது. 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புற்றுநோய் பல்வேறு மர்ம நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுவதால் நிறுவனங்களை தடை செய்ய கோரியும், கிராமத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் அனைத்து மக்களும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்வது என கூட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோர் தீர்மானம் நகல் வழங்கப்பட்டு, 19 மீனவர் கிராமத்தில் இறால் குஞ்சு பொரிப்பகத்தை தடைசெய்ய ஒட்டுமொத்தம் கிராம சபை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதுபோல் இதில்,  செட்டி குப்பம், செட்டி நகர், கூனிமேடு, ரங்கநாதபுரம், மஞ்சக்குப்பம், கீழ்புத்துப்பட்டு, முதலியார்குப்பம் ஆகிய 19 மீனவ கிராமங்களில் இறால் பொரிப்பகம் கம்பெனிகளுக்கு தடை செய்வது என தீர்மானம் போடப்பட்டது.  மரக்காணம் வட்டாட்சியரிடம்  இந்தத் தீர்மான  நகல் வழங்கப்பட்டது. இது சம்பந்தமாக  நடவடிக்கை இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் கிழக்கு கடற்கரை  சாலையில் செய்யப்படும் என கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments