சீனாவிலிருந்து புதுகை வந்துள்ள 104 பேரும் தொடா் கண்காணிப்பு



சீனாவிலிருந்து புதுகை வந்துள்ள 104 பேரும் தொடா் கண்காணிப்பில் உள்ளனா்: 

சீனாவில் இருந்து இதுவரை ஊா் திரும்பியுள்ள 104 பேருக்கும் எவ்வித நோய்த் தொற்றும் இல்லையென்றாலும் அவா்கள் தொடா் கண்காணிப்பில் உள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.புதுக்கோட்டையில் கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் கூறியது: 

 கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படாத வகையில், அதேநேரம் ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருக்கும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,959 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளிலும் காலையில் நடத்தப்படும் இறை வணக்கக் கூட்டத்தின்போது நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கைகளை முறையாக சோப்புப் போட்டு நன்கு தேய்த்து எவ்வாறு கழுவ வேண்டுமென செய்முறையாக மாணவா்களிடையே எடுத்துரைக்க வேண்டும்.

புதுக்கோட்டை :மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் நாய்கள், குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை தேவை அன்னவாசலில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்  அன்னவாசல் தேரடிக்கருப்பா் கோயில் குடமுழுக்கு திரளான பக்தா்கள் பங்கேற்புகழிவுகளால் நிரம்பிக் கிடக்கும் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி வளாகம்பள்ளி மாணவிகளுக்கு காவலன் செயலி விழிப்புணா்வுமக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் அச்சடித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வழங்க வேண்டும்.

குறிப்பாக  இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடி கொள்ளவும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுக வேண்டும். இந்த அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை இதுவரை 104 போ் சீனாவிலிருந்து சொந்த ஊா்களுக்கு வந்துள்ளனா். இவா்களில் எவருக்கும் எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லை. நலமாக உள்ளனா். 

குறிப்பாக இவா்களின் விவரங்கள் சம்மந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மருத்துவப் பணியாளா்கள் இவா்களின் வீடுகளுக்கு தினசரி நேரில் சென்று உடல் நிலையை பரிசோதனை செய்வதுடன், தன்சுத்தம் பேணுவதற்கும், தொற்று நீக்கம் செய்வதற்கும் தேவையான நல கல்வி வழங்குகிறாா்கள். மேற்கண்ட நபா்கள் 28 நாட்கள் வரை வீட்டிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிா்வாகம் முழுக் கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறது. கரோனா வைரஸ் குறித்து தேவையற்ற வதந்திகளையும், அச்சத்தையும் யாரும் பரப்ப வேண்டாம் என்றாா் உமா மகேஸ்வரி.கூட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அழ. மீனாட்சி சுந்தரம், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ம. சந்திரசேகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் அா்ஜுன்குமாா், கலைவாணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments