மேலப்பாளையம் ஷாஹீன்பாக் 16-வது நாளாக தொடரும் போராட்டம்.!குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அதை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் கடந்த 08.02.2020 தேதி  ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 23.02.2020 16-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் போராட்டக் குழுவினர் பார்த்துக் கொள்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த தொடர் இருப்பு போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இதற்க்கு பல கட்சிகள், இயக்கங்கள் ,சமூக ஆர்வலர்கள் சாதி மத பேதமின்றி ஆதரவு அளித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments