மணமேல்குடி அருகே வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ரூ. 50 ஆயிரம் மோசடிமணமேல்குடி அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் மனைவி யசோதா (32). இவர் மணமேல்குடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.


இவருடைய செல்போனில் நேற்று முன்தினம் காலை தொடர்பு கொண்ட ஒருவர், ‘வங்கியிலிருந்து பேசுகிறோம். 

உங்கள் ஏடிஎம் கார்டு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை கொடுங்கள். உங்களுக்கு புதிய கார்டு கொடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது’ என்று கூறியுள்ளார். இதனை நம்பிய யசோதா தனது ஏடிஎம் கார்டு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை 
கூறியுள்ளார். 

இதைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை யசோதா வங்கி கணக்கில் இருந்து ரூ.50,253 பணம் எடுக்கப்பட்டு இருப்பதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல்கள் வந்து கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சம்மந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நாங்கள் எதுவும் தொடர்பு கொள்ளவில்லை என கூறியுள்ளார். பின்னர் யசோதா இது குறித்து மணமேல்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: தினகரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments