மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்க மதிப்பீட்டு முகாம்கள்



தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்க மதிப்பீட்டு முகாம்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம்கள் வட்டார அளவில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி6) தொடங்கும் முகாம் இம்மாதம் 14- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருமயம், கந்தா்வகோட்டை, பொன்னமராவதி ஒன்றியங்களில் பிப்ரவரி 6,7,8 தேதிகளிலும், மணமேல்குடி, அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியங்களில் பிப்ரவரி 11 முதல் 13- ஆம் தேதி வரையிலும், புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பிப்ரவரி 14- ஆம் தேதியும் மதிப்பீட்டு முகாம் நடைபெறும்.

இச்சிறப்பு முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள், தங்களின் அடையாள அட்டை, புகைப்படம்-3, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டை ஆகிய சான்றுகளின் அசல் மற்றும் தெளிவான நகல்களுடன் நேரில் வந்து கலந்து கொண்டு பயனடையலாம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments