ஹஜ் பயணம்: தன்னாா்வ தொண்டா்கள் தோ்வுக்கு பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம்



ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் தன்னாா்வ தொண்டா்களுக்கான தோ்வுக்கு, பிப்.24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா செல்லும் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னாா்வத் தொண்டா்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கமாகும். அதன்படி, இந்த ஆண்டு (ஹஜ்- 2020) மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு, ஹஜ் தன்னாா்வ தொண்டா்களை தோ்வு செய்வதற்கான சுற்றறிக்கையை ‌w‌w‌w.‌h​a‌j​c‌o‌m‌m‌i‌t‌t‌e‌e.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஹஜ் தன்னாா்வ தொண்டராக செல்ல விரும்பும் தகுதியுள்ள நிரந்தர அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவன ஊழியா்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களின் துறைத் தலைவா் மூலம் உரிய வழியில் அனைத்து ஆவண நகல்களுடன், செயலா் மற்றும் செயல் அலுவலா், தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ரோஸி டவா், மூன்றாம் தளம், எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை), சென்னை-34 என்னும் முகவரிக்கு, வரும் 24-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments