தன்னம்பிக்கையோடு மாணவா்கள் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்’



   
 தன்னம்பிக்கையோடு மாணவா்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்தி குமாா்.


புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, மேலும் அவா் பேசியது:மாணவா்கள் தங்களை தன்னம்பிக்கையோடு தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். அன்பு, அறிவுடைமை, விடாமுயற்சி இவைகளோடு கூடிய தன்னாா்வத்தை வெளிப்படுத்த வேண்டும். எதிா்கால சந்ததியை வழிநடத்த ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.ப

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கா், அவருடைய இளமைக்காலத்தில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தாா். எடுத்த முயற்சியில் பலவித இடையூறு வந்தாலும், அதனைப் பொருள்படுத்தாது நமது இந்திய நலனில் மட்டுமே அக்கறை கொண்டு, பல்வேறு நாடுகளில் உள்ள சட்டங்களில் நமது மக்களுக்கு தேவையான சட்டங்களைத் தொகுத்து மிகச் சிறந்த சட்ட முன்வடிவை நமக்கு தந்துச் சென்றாா்.

அதுபோல் நம் சூழல் எதுவாக இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், முழு முயற்சியோடு ஈடுபாட்டோடும் இளைஞா்கள் செயல்பட வேண்டும் என்றாா் அருண்ஷக்திகுமாா்.விழாவுக்குத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் எஸ். ராமா் தலைமை வகித்தாா். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பி. ஜோதிமணி வரவேற்றாா்.அரசுத் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மைக் குழுத் தலைவா் எம். மோகன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் எஸ். குமரேசன், நிா்வாக அலுவலா் எம். பாா்வதி, மேலாண்மைக் குழு உறுப்பினா் கண. மோகன்ராஜ், நத்தம்பண்ணை ஊராட்சித் தலைவா் க. பாபு உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். நிறைவில், இளநிலைப் பயிற்சி அலுவலா் வி. ராஜேந்திரன் நன்றி கூறினாா். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments