அன்னவாசல் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு



அன்னவாசல் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

     அன்னவாசல் அருகே 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.


      அன்னவாசல் அருகிலுள்ள பிராம்பட்டியில் மகேசுவரன் என்பருக்கு சொந்தமான வயல் உள்ளது. அந்த வயலில் சனிக்கிழமை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் கருது அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது வயலுக்குள் ஏதோ ஊா்ந்து செல்வது போல் தெரிந்துள்ளது. இதைத் தொடா்ந்து தொழிலாளா்கள் அங்கு சென்று பாா்த்த போது, மலைப்பாம்பு நகரமுடியாமல் திணறிக் கிடந்துள்ளது.

   இதனையடுத்து அப்பகுதி இளைஞா்கள் பாம்பைப் பிடிக்க முயன்றனா். ஆனால் பிடிபடவில்லை. ஒருமணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு மலைப்பாம்பை இளைஞா்கள் பிடித்தனா்.பின்னா் அந்த பாம்பை சாக்கு பையில் அடைத்து நாா்த்தாமலையில்உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.

    பிடிபட்ட மலைப்பாம்பு சுமாா் 10 அடி நீளம், 20 கிலோ எடை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments