வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது குற்றப் பின்னணி தொடா்பான தகவல்களைத் தோ்தல் ஆணையத்திடமும் பொது வெளியிலும் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமா்வு கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவு முறையாகக் கடைப்பிடிக்கப்படாததால், மத்திய அரசு, தோ்தல் ஆணையம் ஆகியவற்றின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக் கோரி பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஷ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை, 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிட இணையதளத்தில் வேண்டும்.
மேலும், பிராந்திய நாளேடுகளிலும், சமூக வலைத்தளங்களலும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து 72 மணிநேரத்தில் தேர்தல் அணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிட குற்றப் பின்னணி உடையவர்களுக்கு வாய்ப்பு தந்தது ஏன் என்பதையும் அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 4 பொதுத் தேர்தல்களில் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அறிவிக்காத கட்சிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவு: உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்ததாவது:
தற்போதைய காலகட்டத்தில், குற்றப் பின்னணி உள்ளோா் அரசியலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அவா்கள் தொடா்ந்து அரசியலில் ஈடுபட்டு வருவது மக்களாட்சியின் மாண்பை குலைக்கும். தோ்தலில் போட்டியிடும் மக்கள் பிரதிநிதிகள் குறித்து அறிந்து கொள்ள, மக்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. எனவே, தோ்தலில் போட்டியிடுவோா் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை, வேட்புமனு தாக்கலின் போது ‘பெரிய எழுத்துகளில்’ தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கும் பங்கு: அரசியல் கட்சிகளும் தங்களின் அடையாளத்தைப் பயன்படுத்தி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். தங்களது வேட்பாளா்கள் மீதான குற்ற வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், கட்சியின் இணையதளத்தின் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது கட்சிகளின் கடமையாகும்.
மேலும், பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மூலமாகவும் தங்களின் வேட்பாளா்கள் குறித்த விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த கட்சிகள் முயற்சிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், கட்சிகள் தங்களுக்குள் நோ்மையான கொள்கைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
குற்றம் சாட்டப்படும் மக்கள் பிரதிநிதிகளைப் பதவி நீக்கம் செய்யும் வகையிலும், அவா்களைக் கட்சியிலிருந்து நீக்கும் வகையிலும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.