பஸ் சக்கரத்தின் அடியில் சிக்கிய 2 பேர் தலைகள்.. பதற வைக்கும் வீடியோ.. நல்லவேளை.. உயிர்காத்த ஹெல்மெட்பஸ் சக்கரத்தின் அடியில் சிக்கிய 2 பேர் தலைகள்.. பதற வைக்கும் வீடியோ.. உயிர்காத்த ஹெல்மெட்
கோவை: பஸ்ஸின் சக்கரத்தின் அடியில் 2 பேர் சிக்கி கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பதற வைத்து வருகிறது.

கோவையில் காந்திபுரம் செம பிஸியான பகுதி... எந்நேரமும் நகரின் பஸ் ஸ்டாண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்சுகள் நின்று கொண்டும், சென்று கொண்டும் இருக்கும்.

இந்நிலையில், கிராஸ்கட் ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்குள் ஒரு பஸ் நுழைய முற்பட்டது.. அந்த நேரம் பார்த்து ஒரு பைக் வேகமாக வந்தது.

திடீரென பைக்கில் வந்தவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர்.... ஆனால் அதை கவனிக்காத அந்த பஸ் டிரைவர் அப்படியே வண்டியை திருப்பி ஓட்ட முயற்சித்தார்... இதனால் பைக்கானது, பஸ்ஸின் சக்கரத்துக்கு அடியில் சிக்கி தரதரவென இழுத்துச் சென்றது.

அப்போதுதான், மற்ற பயணிகள், பொதுமக்கள் இதை பார்த்து அலறினார்கள்.. பஸ் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது... பயணிகள், டிரைவர் இறங்கி வந்து பார்த்தால், அந்த பஸ்ஸின் சக்கரத்தில் 2 பேர் சிக்கியிருந்தனர்... நல்லவேளை... இருவருமே ஹெல்மெட் போட்டிருந்தனர்... இல்லையென்றால், பஸ்ஸின் சக்கரத்தில் தலைகள் நசுங்கி போயிருக்கும். ஆனால் படுகாயம் அடைந்தனர்.


டிரைவர் சாமர்த்தியமாக பிரேக் போட்டதாலும், முக்கியமாக 2 பேருமே ஹெல்மெல்ட் போட்டதாலும் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. இது சம்பந்தமான சிசிடிவி வெளியாகி உள்ளது.. பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடையும் அளவுக்கு அந்த வீடியோவை பார்க்க பதைபதைப்பாக உள்ளது!
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments