சவுதிஅரேபியாவில் தோட்டவேலை செய்யும்போது தவறிவிழுந்த தமிழக சகோதரர் எடச்சித்தூர் சக்திவேல் அவர்களை தாயகத்திற்கு அனுப்பிவைத்த ரியாத் தமுமுக.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சவுதி அரேபியா அல்ஜூஃப்-சக்காக்கா பகுதியில் தோட்டத்தில் பேரீச்சம்பழம் மர பராமரிப்பு வேலை செய்து கொண்டு இருக்கும் போது தவறுதலாக கீழே விழுந்து கை மற்றும் முதுகு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உறவினர் எடச்சித்தூர் மதியழகன் அவர்கள் தமுமுக ரியாத் மண்டல ஊடகப்பிரிவு துணை செயலாளர் கோபாலப்பட்டிணம் முகமது ரிஸ்வான் அவர்களை தொடர்பு கொண்டு உதவிடுமாறு கோரிக்கை வைத்தார்.
தகவல் சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல்ஹமீது அவர்களிடம் தெரியப்படுத்தப்பட்டது.
தகவலைப் பெற்றுக்கொண்ட அப்துல்ஹமீது அவர்கள் விரைந்து செயல்பட்டு சவுதி அரேபியா விமானம் மூலமாக 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் ஜெத்தா வழியாக சக்திவேலை படுக்கை நிலையில் அனுப்பிவைக்கப்பட்டார்.
இன்று காலை 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் சகோதரர் சக்திவேல் கிருஷ்ணமூர்த்தி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் .
செங்கல்பட்டு வடக்கு மருத்துவ அணி செயலாளர் அப்துல்ரஹ்மான் மற்றும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் நைனாமுகம்மது, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அமானுல்லா அனைவரும் விமானநிலைய அனைத்து உதவிகளையும் செய்து தமுமுக-பூந்தமல்லி ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை பிரபல ஸ்டான்லி மருத்துவமனைக்கு படுக்கை நிலையில் எடுத்துச்சென்று கடைசிவரை இருந்து உதவினர்.
எந்த எதிர்ப்பார்ப்பும்இன்றி உதவிய தமுமுக வினரை சக்திவேல் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.
என்றென்றும் மனிதநேய பணியில்
தமிழ் தஃவா தமுமுக - மமக
சமூக நலத்துறை
மத்திய மண்டலம்
ரியாத் - சவுதி அரேபியா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.