புதுக்கோட்டை மாவட்ட ஊா்க்காவல் படைப் பிரிவில் காலியாக உள்ள வட்டாரத் தளபதி பதவிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா் அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஊா்க்காவல் படையின் வட்டாரத் தளபதியாக சேர கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவா்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இது ஒரு கௌரவ பதவி என்பதால் ஊதியம் ஏதும் வழங்கப்பட மாட்டாது. தேசிய மாணவா் படையில் பயிற்சி பெற்ற விரிவுரையாளா்கள், ஆசிரியா்கள், மருத்துவா்கள், உயா் பதவி வகிப்பவா்கள் இந்த வட்டாரத் தளபதி பதவியில் சோ்ந்து தொண்டு செய்யலாம். விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். வட்டாரத் தளபதி பதவிக்கு விணப்பிக்க விரும்புவோா் இதற்கான விண்ணப்பப் படிவத்தை புதுக்கோட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், பிறப்புச் சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ், அரசு மருத்துவரிடம் பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ், 2 புகைப்படங்கள் ஆகியவற்றை
காவல் கண்காணிப்பாளா்,
புதுக்கோட்டை மாவட்டம் -622001
என்ற முகவரிக்கு வரும் பிப். 15ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.