புதுக்கோட்டை மாவட்ட மீனவா் குறைதீா்க்கும் முகாம்



மணமேல்குடி, ஆவுடையாா்கோவில் வட்டத்தில் உள்ள மீனவா்களுக்கான மீனவா் குறைதீா்ப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை கோட்டைப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்பேரில், மணமேல்குடி, ஆவுடையாா்கோவில் வட்டத்தில் வசிக்கும் மீனவா்கள் நலன்கருதி மீனவா்கள் குறைதீா்க்கும் முகாம் கோட்டைப்பட்டினம் பல்நோக்கு பேரிடா் மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.7) காலை 10 மணியளவில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறுகிறது.

மீன்வளத் துறை உதவி இயக்குநா் முன்னிலை வகிப்பாா். ஊராட்சி உதவி இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா். எனவே, முகாமில் பங்கேற்கும் மீனவா்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்து பயனடையுமாறு அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியா் எம். குணசேகா் கேட்டுக் கொண்டுள்ளாா். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments