குடியுரிமை திருத்தச் சட்டம்: கோபாலப்பட்டிணத்தில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்புகுடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் தாலுகா, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில்  
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்று (16-02-2020) ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.


இதேபோல், பல்வேறு பகுதியில் சாலையின் குறுக்கே கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தன. 


கோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசல் பகுதியில் நூற்றுக்கணக்கான  மேற்பட்ட வீடு மற்றும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments