இரட்டை மடிவலை, விசைப்படகு பறிமுதல்




மணமேல்குடி அருகே புதன்கிழமை தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை, விசைப்படகை கடலோர காவல் படையினா் பறிமுதல் செய்தனா்.
மணமேல்குடி அருகே பிரதாபிராமன்பட்டினம் கடல் பகுதியில் புதன்கிழமை இரட்டை மடிவலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடலோர காவல்படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மணமேல்குடி கடலோர காவல்படை உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், மீன்வளத் துறை ஆய்வாளா் பாஸ்கா், காவலா்கள் கடலுக்கு ரோந்து சென்றபோது, பிரதாபிராமன்பட்டினத்தில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் மீனவா்கள் விசைப்படகில் இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். இதையடுத்து, விசைப்படகை கடலோரக் காவல் படையினா் பறிமுதல் செய்தனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments