அறந்தாங்கியில் மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம்அறந்தாங்கியில் மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அறந்தாங்கி வஉசி திடலில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர திமுக செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் வீராச்சாமி முன்னிலை வகித்தார். 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயலாளர் சுந்தரவள்ளி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஹாரூன்ரசீது, அய்யா தர்மயுகவழி பேரவை நிறுவனர் பாலமுருகன், ஒய்எம்ஜே மாநில தலைவர் அல்தாபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் கவிமுரசு, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முபாரக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். திராவிடர் கழக மண்டல தலைவர் ராவணன், நகர தலைவர் பன்னீர்செல்வம், சமாஜ்வாதி கட்சி மாவட்ட தலைவர் சரவணமுத்து, அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் வரதராஜன், அறந்தாங்கி இஸ்லாமிய மன்ற தலைவர் பீர்சேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments