நாகுடியில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் பேரணிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - கட்டுமாவடி சாலையில் உள்ள  நாகுடியில் மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி  மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நாளை 23.02.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நாகுடி கடைவீதியில் மாலை 03.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை மாபெரும் கண்டன பேரணியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


இந்த பேரணி மாலை 3.00 மணியளவில் நாகுடி கல்லணை கால்வாய் அருகில் பேரணி துவங்கிறது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் 
திரு. சு.திருநாவுக்கரசர் M.A.,B.L. அவர்கள், காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திரு. திருச்சி, வேலுச்சாமி அவர்கள், தமுமுக தலைமை கழக பேச்சாளர் திரு. பழனி.MI.பாரூக் அவர்கள், SDPI கட்சி மாநில பேச்சாளர்  திரு. P.முஹம்மது ஹுசைன் அவர்கள், நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. இடும்பாவனம். கார்த்தி அவர்கள், சமூக செயற்பாட்டாளர் திரு. தோழர்.மதிமாறன் அவர்கள்,  CPIM மாநில செயற்குழு உறுப்பினர் திரு M. சின்னத்துரை, அவர்கள் மற்றும் திமுக வழக்கறிஞர் திரு.பா.வெங்கடேசன் MA., B.L ஆகியோர் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

ஆகவே இந்த மாபெரும் பேரணியுடன் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாகுடி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அலை கடலென திரண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

நமது உரிமையை வென்றடுக்க அழைப்பது :

மக்கள் ஒற்றுமை மேடை நாகுடி மையம், 
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, 
புதுக்கோட்டை மாவட்டம்.
தமிழ்நாடு.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments