கோவை ஆத்துப்பாலம் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் ! (படங்கள்)



குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஆத்துப்பாலத்தில் நடந்து வரும் தொடர் இருப்பு போராட்டத்தில் இளம் தம்பதியினருக்கு இன்று வியாக்கிழமை திருமணம் நடந்தது.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள்  சார்பாக  கோவை ஆத்துப்பாலம் அருகே இரண்டாவது நாளாக தொடர் இருப்பு போராட்டம் நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் , மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலையில் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தொடர் இருப்பு போராட்டங்களின் இடையே கோவை குனியமுத்தூரை சேர்ந்த அப்துல்கலாம் கரும்புக்கடையைச் சேர்ந்த ரேஷ்மா ஷெரின் ஆகிய இளம் தம்பதியினருக்கு போராட்ட களத்திலேயே திருமணம் நடந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்த திருமணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.மேலும் புதுமணத்தம்பதிகளும் கையில் பதாகைகளை ஏந்தி கோசம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.







கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments