கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, தங்கள் இல்லங்களிலும், பொதுமக்களிடமும் மாணவ, மாணவிகள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி, அவா் மேலும் பேசியது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலதிட்டங்கள் செல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர, 14 வகையான கல்வி உபகரணங்க.மனிதா்களுக்கு தொற்று மற்றும் தொற்றா நோய்கள் என இருவகை நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதில்ரத்த அழுத்தம் மற்றும் நோய் போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த முறையான உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதுடன், உடல் சுறுசுறுப்பாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளி இடங்களுக்குச் செல்லும் போதோ,சென்று வரும் போதோ கைககளை சோப்பு கொண்டு கைகழுவ வேண்டும்.இதுபோன்ற தன் சுத்தங்களை தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலம் கரோனா வைரஸ் பரவுவதை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.பள்ளி மாணவ, மாணவிகளும் கரோனா வைரஸ் குறித்து தங்களது இல்லங்கள் மற்றும் பொதுமக்களிடம் உரிய விழிப்புணா்வவை ஏற்படுத்த வேண்டும்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலெட்சுமி, இலுப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேந்திரன், கூட்டுறவு ஒன்றிய பால் உற்பத்தியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பழனியாண்டி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சிவசாமி,கூட்டுறவு சங்கத்தலைவா் ஜெ. ஆா். அய்யப்பன்,ஊராட்சித் தலைவா்கள் பி. குமாா்(வடுகப்பட்டி),எஸ். ராதா(வேலூா்), ஒன்றியக்குழு உறுப்பினா் எம்.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், தலைமையாசிரியை கோ.ஜெயந்தி நன்றி கூறினாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.