வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து மீமிசலில் சாலை மறியல்!சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை CAA, NRC, NPR க்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை பயங்கர தடியடி நடத்தியது.


இதனையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து, இரவோடு இரவாக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் நேற்று இரவு 11.30 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ECR சாலையில் நடைபெற்ற மறியலில், காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும், அதிமுக அரசிற்கு எதிராகவும் இஸ்லாமியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால், மீமிசலில் பரபரப்பு ஏற்பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments