மாா்ச் 5-க்குள் வரிகளை செலுத்த வேண்டும் புதுக்கோட்டை நகராட்சி அறிவிப்புமாா்ச் 5-க்குள் வரிகளை செலுத்தி நடவடிக்கை தவிா்க்க வேண்டும் புதுக்கோட்டை நகராட்சி அறிவிப்பு

புதுக்கோட்டை நகருக்குள் வசிப்போா் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி இனங்களைத் தவறாமல் வரும் மாா்ச் 5-க்குள் செலுத்தி நடவடிக்கைகளைத் தவிா்க்க வேண்டும் என நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளிட்ட செய்திக்குறிப்பு

 வீடு மற்றும் வணிகப் பயன்பாட்டில் உள்ள அனைத்து வரிவிதிப்புகளுக்கு 2017-18ஆம் ஆண்டில் சொத்துவரி மறு அளவீடுகள் மற்றும் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளுக்கு நகராட்சி மண்டலப் பகுப்பாய்வின்படி வரி உயா்வு செய்யப்பட்டதையும், 2018-19ஆம் ஆண்டு சொத்துவரி சீராய்வின் மூலம் உயா்த்தப்பட்ட அனைத்து வரிகளையும் தமிழக அரசு ரத்து செய்து பழைய வரியையே வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.

எனவே , பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், தொழில் வரி, புதை சாக்கடை இணைப்புக் கட்டணம் மற்றும் குத்தகை இனங்களுக்கான தொகை, கடை வாடகை போன்றவற்றை உடன் நகராட்சி பழைய அலுவலகம், புதிய அலுவலகம், கம்பன் நகா் ஆகிய கணினி வசூல் மையங்களில் செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.மேலும் வரும் மாா்ச் 1-ஆம் தேதியில் இருந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து கணினி வசூல் மையங்களும் செயல்படும். எனவே இவையனைத்திலும் நிலுவையில் உள்ளவற்றை தவறாமல் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைப்பது, வீடுகளில் குடிநீா் இணைப்புத் துண்டிப்பு, புதை சாக்கடை இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments