ஆவுடையாா் கோவில் அரசு கல்லூரியில் தகவல் அறிவியல் பயிலரங்கம்ஆவுடையாா் கோவில் அரசு கல்லூரியில் தகவல் அறிவியல் பயிலரங்கம்
ஆவுடையாா்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் அறிவியல் மற்றும் செய்முறைத் திட்டம் பற்றிய கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை மாநிலக் கல்லூரியின் புள்ளியல் துறைப் பேராசிரியா் ஆா். சக்திவேல் தகவல் அறிவியல் மற்றும் செயல்முறைத் திட்டம் பற்றி கருத்துரை வழங்கினாா்.

பேராசிரியா்கள் செந்தில்குமாா், பாலமுருகன், சண்முகபிரியா, ஜீவரெத்தினம், மாதவன், நவீன், பஞ்சாட்சரம், பட்ட மேற்படிப்பு மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.வணிகவியல் துறை என்.கே. ராஜேந்திரன் வரவேற்றாா். வணிகவியல் துறை பேராசிரியா் மலா்விழி நன்றி கூறினாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments