குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடியில் முஸ்லிம்கள் 4-வது நாளாக தர்ணா போராட்டம்



கறம்பக்குடியில் முஸ்லிம்கள் 4-வது நாளாக போராட்டம்
    
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடியில் முஸ்லிம்கள் 4-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், கறம்பக்குடி புளியஞ்சோலை பள்ளிவாசல் திடலில் கடந்த 19-ந்தேதி தர்ணா போராட்டம் தொடங்கப்பட்டது. 4-வது நாளாக நேற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோ‌‌ஷம் எழுப்பினர்.

தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் விளக்கி பேசினர். இந்த போராட்டத்தில் தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைபித்தன் உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதற்கிடையே தொடர் போராட்டத்தை முடித்து கொள்ளும்படி வருவாய் துறை மற்றும் போலீசார் சார்பில், முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments