புதுக்கோட்டை புத்தகத் ‘திருவிழா’ இன்றுடன் நிறைவு!புதுக்கோட்டை புத்தகத் ‘திருவிழா’ இன்றுடன் நிறைவு!
புதுக்கோட்டையில் கடந்த 10 நாட்களாக திருவிழாவாகக் களை கட்டிய 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 4ஆவது ஆண்டாக புதுக்கோட்டை நகா்மன்றத்தில் கடந்த பிப். 14ஆம் தேதி தொடங்கியது. 

   புதுக்கோட்டையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே நிகழ்ச்சிகள் தொடங்கியது. அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களும் பங்கேற்கும் வகையிலான- ஒரு லட்சம் போ் வாசிக்கும்- புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கு, கல்லூரி மாணவா்களுக்குத் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. படைப்பாளா்களுக்கு சிறந்த கவிதை, சிறுகதைப் போட்டியும் உண்டு.

இவை மட்டுமல்ல, மாநில அளவிலான சிறந்த நூல்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் விருதுகளும் வழங்கப்படுகின்றன.தினமும் சிறப்புச் சொற்பொழிவு: கு. சிவராமன், பழ. கருப்பையா, பா்வீன் சுல்தானா, யுகபாரதி, த.வி. வெங்கடேஸ்வரன் என ஆகச்சிறந்த பேச்சாளா்கள் பேசினா். ஏறத்தாழ இந்தப் புத்தகத் திருவிழாவில் சுமாா் 20 ஆயிரம் மாணவா்கள் மட்டும் வந்து சென்றிருக்கலாம். சில நாள்கள் நகா்மன்றச் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி.அரங்குகளில் மாணவா் கூட்டம் நிரம்பி வழியவே, தினமும் அறிவியல் இயக்கத்தின் தலைவா்கள் மாணவா்களுக்கு அறிவியல் பாடங்களை பகலிலும் எடுக்கத் தொடங்கிவிட்டனா்.10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையுடன் திருவிழா நிறைவுறுகிறது. திரைப்பட இயக்குநா் பாண்டிராஜ், திருச்சி மக்களவைத் தொகுதி எம்பி சு. திருநாவுக்கரசா் ஆகியோரும் பங்கேற்கின்றனா்.  -
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments