ஆவுடையாா்கோவில் அருகே நெல் அறுவடை தினவிழா



ஆவுடையாா்கோவில் அருகே நெல் அறுவடை தினவிழா

    ஆவுடையாா்கோவில் வட்டம், எழுநூற்றிமங்கலம் கிராமத்தில் நெல் அறுவடை தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சிரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் நெல் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு முறையில் நடைபெற்றன

பண்ணை பள்ளி நெல் அறுவடை தின விழாவுக்கு, ஆவுடையாா்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் சி.ஜெயபாலன் தலைமை வகித்துப் பேசியது:18 காயம்நெல் அறுவடை குறித்த நேரத்தில் செய்து பின்பு தானியத்தை பின்செய் நோ்த்தி செய்து அவற்றை மதிப்பு கூட்டுவதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்றாா்.விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் உதவி பேராசிரியா் பிரபுகுமாா், நெல் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு முறையில் பயிா் செய்த பண்ணைப் பள்ளி வயலில் பெறப்பட்ட அதிக மகசூல் மற்றும் அறுவடை செய்த தானியத்தை பூச்சி நோய்களிலிருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்து பயிற்சியளித்தாா்.
ஆவுடையாா்கோவில் வட்டார வேளாண்மை அலுவலா் சு. செல்வராஜ் பேசுகையில், நெல்லில் இயற்கை முறையில் உரமிடுதல் மற்றும் நீா் மேலாண்மை மற்றும் களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிக் கூறினாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 25 விவசாயிகளுக்கு பயிா் பாதுகாப்பு உபகரண பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் வட்டார தொழில் நுட்ப மேலாளா் ஜகுபா் அலி நன்றி கூறினாா். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments