ஐ.டி.ஐ மாணவர்களுக்கு தொழில் பயிற்சி     
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகத்தில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய பயிற்சி(இன்டர்ன்ஷிப் டிரெயினிங்) வழங்கப்படவுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் பேருக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையத்தில் அறியலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை கிண்டி தொழிற்பேட்டை ஆலந்துார் ரோட்டிலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 044-2250 1002 போனிலும் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பமுள்ள தொழில் நிறுவனங்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க பிப்., 29 இறுதி நாளாகும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments