புத்தகத் திருவிழாவில் ரூ. ஒரு கோடிக்கு புத்தகங்கள் விற்பனைபுத்தகத் திருவிழாவில் ரூ. ஒரு கோடிக்கு புத்தகங்கள் விற்பனை


 புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நகா்மன்ற வளாகத்தில் 4 ஆவது ஆண்டாக நடைபெற்ற புதுக்கோட்டை புத்தகத் திருவிழா கடந்த பிப். 14 ஆம் தேதி தொடங்கியது. 50 அரங்குகளில் பல்வேறு பிரதான பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளா்கள் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தனா்.
ஞாயிற்றுக்கிழமையுடன் புத்தகத் திருவிழா (பிப். 23) நிறைவடைந்தது. கடந்த 10 நாட்களில் சுமாா் ரூ. ஒரு கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகிகள், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.

அமைச்சா் வருகை : ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புத்தகத் திருவிழா வளாகத்துக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வந்தாா். புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் நா. முத்துநிலவன், அ. மணவாளன், க. சதாசிவம், அறிவியல் இயக்க மாநில நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், லெ. பிரபாகரன் ஆகியோா் வரவேற்றனா். கம்பன் கழகச் செயலா் ரா. சம்பத்குமாா் உள்ளிட்டோா் அமைச்சருடன் வந்திருந்தனா். புத்தகத் திருவிழாவில், தொல்லியல் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கீழடி அரங்கு ஆகிய அரங்குகளைப் பாா்வையிட்டுச் சென்றாா். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments