குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டத்தில் பங்கேற்ற 100 பேர் ரத்ததானம்திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் அணைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 15ம்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர்.
இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று 18வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெர்மன்அலி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தப்பா சித்திக், அன்சாரி, வக்கீல் தீன்முகமது, அபுபக்கர் சித்திக், சம்சுதீன் மற்றும் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் தனித்தனியாக பங்கேற்று எதிர்ப்பு கோசங்கள், பெண்கள் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி, எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் அகமது நவவி, வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் வழக்கறிஞர் அசரப் அலி ஆகியோர் பேசினர்.

இந்தநிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண், பெண்கள் ரத்ததானம் செய்தனர். போராட்டகளத்தில் இஸ்லாமியர்கள் ரத்ததானம் செய்த சம்பவம் முத்துப்பேட்டை சுற்று பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments